• Jan 18 2025

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரிவர்ஸ் இல்லாமல் ஹை ஸ்பீடில் பறக்கும் அமரன்.. மொத்த கலெக்சன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான படங்களில்  பலராலும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக அமரன் திரைப்படம் காணப்படுகிறது. இந்த திரைப்படம் உயிரிழந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கை  வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரராகவே வாழ்ந்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளையே 43 கோடிகளை வசூலித்தது. தற்போது இந்த படம் 250 கோடிகளை வெறும் இரண்டு வாரங்களில் வசூலித்துள்ள நிலையில்,  சமீபத்தில் இந்த திரைப்படம் 300 கோடியை எட்டியதாக இதன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள்.

d_i_a

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியான போது அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணத்தினால் அமரன் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஒளிபரப்பாக நல்ல வாய்ப்பாக காணப்படுகின்றது.


இந்த நிலையில், அமரன் திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மொத்தமாக 315 கோடிகளை வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அமரன் திரைப்படம் தியேட்டர் ஓனர்களுக்கு நஷ்டத்தை கொடுக்காமல் வார இறுதியிலும் சக்கைலாபம் சம்பாதித்து கொடுக்கும் அளவில் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதன் காரணத்தினால் வார இறுதி நாட்களிலும் நல்ல வசூல் கிடைக்கும் எனவும் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக அமரன் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement