தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் கங்குவா. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பின்பு சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அமோக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் படம் வெளியான பிறகு அதிக அளவில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கின.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வரலாற்று கதை அம்சம் நிறைந்த படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் முதலாவது பாகம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் வசூலிலும் பலத்த அடி விழுந்தது.
d_i_a
இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக மிரட்டியதோடு இவர்களுடன் கருணாஸ், யோகி பாபு, கார்த்தி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் வெளியாகி 108 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கங்குவா திரைப்படம் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பில் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் ஓபன் ஆக சில விஷயங்களை பேசி உள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் 170 கோடி. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி சாட்டிலைட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கணிசமான தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் பெரிய தொகை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அது நடக்கவில்லை. கங்குவா தோல்வி படமாக தான் அமைந்தது. அப்படி இருந்தும் கூட கங்குவா படத்திற்கு பெரிதளவில் நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்று குறித்த தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Listen News!