• Apr 17 2026

இரண்டாவது கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்கும் அமலாபால்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். கிராமத்துப் பெண்ணணாக நடித்த இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.அத்தோடு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.


இதையடுத்து,  தலைவா, வேலையில்லா பட்டதாரி,  வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது. 


அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த அமலா பால் கடாவர் படத்தை தயாரித்து மீண்டும் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். அண்மையில் இவர் நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

புதுமண தம்பதிகளான இவர்கள் தேன் நிலவை கொண்டாடி வரும் நிலையில், தனது காதல் கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுத்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement