• Jan 18 2025

இதெல்லாம் ஒரு ப்ரோமோவா? சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.அதில் ஏற்கனவே மீனா அவசர அவசரமாக  ஆடருக்கு பூமாலை கட்டிக் கொண்டிருக்க, அங்கு வந்த விஜயா தான் பார்வதி வீட்டுக்கு செல்கின்றேன் எனக்கு 11 மணிக்கு சரியாக சாப்பாடு கொண்டு வந்து தருமாறு சொல்லுகிறார்.


ஆனாலும் மீனா நான் பூமாலை கட்டிக் கொண்டிருக்கிறேன். எப்படி அத்தை கொண்டு வந்து தர முடியும் என கேட்க, நீ எனக்கு சாப்பாடு தந்து விட்டு என்னவென்றாலும் செய் என்று விஜயா சொல்கின்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து அப்படி என்றால் மீனாவுக்கு  சம்பளம் கொடுங்கள் என்று சொல்ல, மாமியாருக்காக மருமகள் இதைக் கூட பண்ண முடியாதா என டயலாக் விடுகின்றார் விஜயா. இதைக் கேட்டு முத்து நெஞ்சை பிடித்து அதிர்ச்சி அடைகின்றார்.


அதன் பின்பு மீனா விஜயாவுக்கு சாப்பாடு கொண்டு செல்லும்போது, வழியில் வயது முதிர்ந்த தம்பதி ஒன்றை  பார்க்கின்றார். அதில் வயதான பாட்டி மயக்கமாக இருப்பதை பார்த்து அவர்களுக்கு சாப்பாடை கொடுத்துவிட்டு வருகின்றார். அதன் பின்பு விஜயாவுக்கு பிரியாணி வாங்கி கொடுக்க பார்வதியும் சந்தோஷப்படுகிறார். வீட்டுக்கு வந்த விஜயா சாப்பிட்டது ஜீரணமாகாமல் உட்கார்ந்து இருக்க, அங்கு வந்த அண்ணாமலை ஏன் கீரை, பொரியல் என்று விதம் விதமா சமைச்சியே என்ன நடந்தது என்று மீனாவிடம் கேட்கிறார். 


இதுதான்  தற்போது வெளியான ப்ரோமோ. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வர வர சிறகடிக்க ஆசை சீரியல் இழுத்தடித்துக் கொண்டு செல்வதாகவும் ரோகிணி பற்றிய உண்மைகளை வெளி விடாமல் டைரக்டர் கதையின் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவும், இதனால் இந்த சீரியலை பார்க்கவே பிடிக்கவில்லை என தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement