• May 18 2024

பல கோணத்தில் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க... அஜித் பட நடிகை வேதனையில் அளித்த பரபரப்பு பேட்டி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் 'துணிவு' பட நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மெர்ச்சி சித்ரா அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றது. 

அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் சினிமா துறையில் முயற்சித்தபோது அங்கு பல பிரச்சனைகள் எனக்கு தெரியாது. மீடியாவிற்குள் நான் நுழையும் போது இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் மீடியாவில் வந்த பிறகு அப்படி எதுவும் இல்லை. அதனால் தைரியத்துடன் சினிமாவில் நடிக்க பல முயற்சிகள் செய்தேன். 


ஆனால் இதற்குப் பலரும் பலவிதமான எதிர்ப்புகளை கொடுத்தார்கள். வாய்ப்புத் தேடிப் போன ஒரு சிலர் தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள். அதுமட்டுமல்லாது சிலர் தவறாகவும் பேசினார்கள். மேலும் ஒரு சிலர் இதெல்லாம் செய்தால் தான் உங்களுக்கு வாய்ப்பு தர முடியும் என்றெல்லாம் ஓப்பனாக கூறினார்கள். 

ஆகவே எனக்கு அது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. சினிமாவில் நான் பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன். அப்படி நான் சந்தித்த எல்லாமே எனக்குப் பிரச்சினையாக தான் இருந்தது. நடிக்க வேண்டும் என்று நினைத்தால் இத்தனை பிரச்சனை எல்லாம் நமக்கு வருமா என்று ஒரு கட்டத்தில் யோசிக்க ஆரம்பித்தேன்" என்றார்.


மேலும் "எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று நினைத்து செய்தி வாசிப்பாளர் வேலையை ஒழுங்காக பார்ப்போம் என்று நினைத்தேன். என்னிடம் ஒரு சிலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் அட்ஜ்ஸ்ட்மென்ட் கேட்டார்கள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு போட்டோவில் பளிச் என்று இருக்கீங்க, நேரில் கருப்பா இருக்கீங்க என்றும் பலர் என்னை விமர்சித்தார்கள்" எனவும் அப்பேட்டியில் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் மெர்ச்சி சித்ரா.

Advertisement

Advertisement