• Jul 27 2024

மலையாள சினிமாவுக்குள் கால்பதிக்கும் பாரதிராஜா! என்ன படம் தெரியுமா ?

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் , இயக்குனர்கள் , இசையமைப்பளர்கள்  முன்னணியாகவும் அவர்களின் திரைப்படங்கள் இன்றளவும் பேசுபொருளாகவும் உள்ளது. அவ்வாறு இருக்கும் இயக்குனர் பாரதிராஜா குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


இவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர்ஆவார். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார். ‘இயக்குநர் இமயம்' பாரதிராஜா, முதல்முறையாக மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார் 'சவுதி வெள்ளக்கா', 'ஆப்ரேஷன் ஜாவா' படங்களை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மோகன் லால் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement