• Jun 19 2025

சம்பவம் செய்ய ரெடியாகும் அஜித்குமார்..! வெளியானது AK 64 படத்தின் சூப்பரான அப்டேட்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் அதிரடி நாயகனாகவும் விளங்குபவர் நடிகர் அஜித் குமார். அவரது அடுத்த படமான AK 64 குறித்து தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளன.


குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு, அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த புதிய படமான AK 64 படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.

அத்துடன் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு 2025 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா வட்டாரத்திலும் மிகுந்த கவனத்தைப் பெற்ற செய்தியாக மாறியுள்ளது.


மேலும், குட்பேட்அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை ஜி. வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement