• Jul 12 2025

மருத்துவமனையில் குழந்தைகளை ஆடல் பாடலுடன் குஷிப்படுத்திய நடிகர்.. வைரலான மனிதநேய வீடியோ!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஹாலிவூட் உலகையும், ரசிகர்களின் நெஞ்சையும் வென்ற நடிகர் என்றால், அது ஜானி டெப் (Johnny Depp) தான். 2003-ல் வெளியான ‘Pirates of the Caribbean’ திரைப்படத்தில் ‘ஜாக் ஸ்பேரோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து, உலகம் முழுவதும் அவருக்கான ரசிகர்கள் கூட்டங்கள் உருவாகின.


தொடர்ந்து, அந்தத் தொடரின் பல பாகங்கள் வெளிவந்தாலும், ‘ஜாக் ஸ்பேரோ’ என்ற கேரக்டருக்குள் இறங்கிய ஜானி டெப்பின் தனித்துவமான நடிப்பும், வித்தியாசமான பாவனைகளும், அவரை மக்களிடம் மேலும் நெருக்கமாக்கின.

இப்போது, அந்த கதாபாத்திரத்தை மீண்டும் மக்களுக்கு நிரூபிக்கும் வகையிலான செயலை தற்பொழுது செய்திருக்கிறார். அதுவேறெதுவும் இல்லை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க நேரில் மருத்துவமனைக்கு சென்றது தான்.


ஜானி டெப் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல், இயக்குநராகவும் தனது ஆற்றலைக் வெளிக்காட்டியவர். அத்தகைய ஜானி டெப் தற்போது ஸ்பெயின் நாட்டில் ‘Day Drinker’ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. படத்தில் அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பின் இடையில், ஜானி டெப்  ‘ஜாக் ஸ்பேரோ’ உடையில், ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைக்கு சென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கதைத்து விளையாடியுள்ளார்.

இந்த நிகழ்வை மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement