தல அஜித் கடந்த ஆண்டு நடித்து முடித்து விடாமுயற்சி ,குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு காத்திருந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் 6 ஆம் திகதி வெளியாகி கலவனான விமர்சனங்களை பெற்றுள்ளது என்றே சொல்லலாம் அதைவிட ஒரு சில தகவல்கள் படம் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லி வருகின்றனர்.
இந்த படத்தின் வசூல் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்க படுகின்றது. இருப்பினும் இப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.
இந்த நிலையில் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் படம் தொடர்பில் "குட் பேட் அக்லி படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டருக்கு சாதாரணமாக போக முடியாது. விக்ஸ் அல்லது ஹால்ஸ் எடுத்துக்கொண்டு தான் போக வேண்டும். காரணம் படம் முழுக்க கத்தி கத்தி ரசிகர்களுக்கு தொண்டை வலியே வந்துவிடும் " என பேட்டி ஒன்றில் மஸான தகவல் ஒன்றினை கூறியுள்ளார்.
Listen News!