• Jan 19 2025

’விடாமுயற்சி’ படத்தை கிடப்பில் போட்ட அஜித்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர லைகா முடிவா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

’விடாமுயற்சி’ படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் படத்திற்கு அஜித் செல்ல முடிவெடுத்து இருப்பதை அடுத்து அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் அஜித் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருந்த நிலையில் அந்த படம் திடீரென டிராப் ஆனதால் நயன்தாரா வீட்ட சாபமா என்னமோ தெரியவில்லை, ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளது. 



இந்த நிலையில் அஜித் கொடுத்த தேதிகளை எல்லாம் வீணாகிய லைகா நிறுவனம் இன்னும் படபிடிப்பை முடிக்காமல் இருக்கும் நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் ’விடாமுயற்சி’ படத்தை முடிக்காவிட்டால் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கு சென்று விடுவேன் என்றும் அதன் பின்னர் அந்த படத்தை முடித்துவிட்டு 2025 ஆம் ஆண்டு தான் ’விடாமுயற்சி’ படத்திற்கு திரும்ப வருவேன் என்றும் அஜித் கூறியதால் லைகா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இது போல்தான் இயக்குநர் ஷங்கர் ’இந்தியன் 2’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ’கேம் சேஞ்சர்’ படத்திற்கு சென்றபோது, லைகா நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல் அஜித் ’விடாமுயற்சி’ படத்தை கைவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு சென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 



இந்த நிலையில் இதுகுறித்து அஜித், லைகா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை என்றால் லைகா மற்றும் அஜித் தரப்பிடையே விரிசல் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement