லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய படங்களில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் ’தலைவர் 171’ படத்திலும் இணைய இருப்பதாக மாஸ் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து டான்ஸ் ஆடியவர் சாண்டி மாஸ்டர் என்பதும் ’பத்தல பத்தல’ என்ற பாடலுக்கு அவர்தான் டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவரை டான்ஸ் மாஸ்டராக மட்டுமின்றி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார் என்பதும் கிட்டத்தட்ட சைக்கோ கேரக்டரில் சாண்டி மாஸ்டர் பட்டையை கிளப்பி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’தலைவர் 171’ படத்திலும் சாண்டி மாஸ்டரை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைப்பதோடு அந்த படத்தின் ஒரு பாடலுக்கும் நடன இயக்குனராக பணிபுரிய கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சாண்டி மாஸ்டரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ‘தலைவர் 171’ படத்தில் ஒரு பெரிய சம்பவம் இருக்குது என்று சாண்டி மாஸ்டர் கூறிய நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பிசியாக இருக்கும் நிலையில் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்திலும் அவர் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!