• Jan 19 2025

’வண்டியை இப்படி ஓட்டக்கூடாது.. பைக்கர்களுக்கு கிளாஸ் எடுத்த அஜித்.. வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனதை அடுத்து நடிகர் அஜித் பைக் டூர் கிளம்பி விட்டார் என்பதையும் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தன்னுடன் வரும் பைக்கர்களிடம் அவர் எப்படி வண்டியை ஓட்ட வேண்டும், எப்படி ஓட்டக்கூடாது என்று கிளாஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு காரணமாக தற்காலிகமாக பைக் டூரை ஒத்தி வைத்திருந்தார். ஆனால் தற்போதுவிடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகி வருவதை அடுத்து அவர் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு டூருக்கு கிளம்பிவிட்டார்

இந்த நிலையில் அஜித்துடன் எப்போதுமே ஒரு பைக் டீம் செல்வார்கள் என்பதும் அவர்களுக்கு அவ்வப்போது அவர் ஆலோசனை கூறி வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது தனது டீமில் உள்ள ஒருவருக்கு பைக்கை எப்படி ஓட்ட வேண்டும், எப்படி ஓட்டக்கூடாது என்று அறிவுரை கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. பைக் ஓட்டுவதில் பல தந்திரங்களை கற்றுள்ள அஜித் கிளாஸ் எடுப்பதை அந்த டீமில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.



Advertisement

Advertisement