• Jan 19 2025

ரஜினி மட்டும் வேண்டும், அவருடைய மகள் வேண்டாமா? தனுஷை கடுமையாம விமர்சிக்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த போஸ்டர் ரிலீஸ் விழா இன்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், அருண் மாதேஸ்வரன், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இதில் தனுஷ் பேசியது தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் ’நான் இரண்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க விரும்பினேன் என்றும் ஒன்று இளையராஜா, இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் ஒன்று நிறைவேறி விட்டது இன்னொன்று விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷ், அதன் பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு ரஜினி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பேன் என்று எப்படி அவர் தைரியமாக கூறலாம் என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வேண்டும், ஆனால் ரஜினியின் மகள் மட்டும் வேண்டாமா என்றும் ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, சினிமா வேறு என்றும் ரஜினி மகளை அவர் பிரிந்தாலும் ரஜினி மீது இன்னும் அவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்றும் தனுஷ் ரசிகர்கள் பதிலடியாக கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement