• May 06 2024

‘வாரிசு’ தோல்வியால் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வம்சி.. பல ஹிட் கொடுத்தவரை முடக்கிய விஜய்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்தவாரிசுதிரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இந்த படத்தை இயக்கிய வம்சிக்கு அடுத்த படம் இன்னும் கிடைக்கவில்லை என்பது பரிதாபமாக பார்க்கப்படுகிறது.
வாரிசுதிரைப்படத்தை இயக்கிய வம்சி தெலுங்கு திரை உலகில் ஏற்கனவே சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பாக மகேஷ்பாபு நடித்தமகரிஷிஎன்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் நடித்தவாரிசுதிரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்ற வம்சி இந்த படம் ஹிட்டானால் தனக்கு தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி தமிழிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.

இந்த படம் தமிழில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் படுதோல்வி அடைந்தது என்பது தெலுங்கு விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் பெரும் நஷ்டம் ஆகினர் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த வம்சிக்குவாரிசுபடம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த படத்தின் தோல்வி காரணமாக இன்னும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதாக தெலுங்கு திரை உலகினர் கூறி வருகின்றனர்.

தமிழில் இவர் ஒரு சில படங்களை இயக்கிய முயற்சித்த நிலையிலும் பேச்சு வார்த்தையோடு நின்று விட்டதாகவும் அடுத்த படம் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் படத்தை இயக்கியதால் பல ஹிட் கொடுத்த வம்சி தற்போது படம் இன்றி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து தெலுங்கு திரையுலகினர் பரிதாபமாக அவரை பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement