• Dec 07 2024

மீண்டும் தந்தையான டி. இமான்..! பலரையும் நெகிழவைத்த செயல்! குவியும் பாராட்டுக்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக  காணப்படும் டி இமான் தனது முதல் மனைவி ஆன மோனிகாவை விவாகரத்து செய்து இரண்டாவதாக எமிலி என்பவரை திருமணம்  செய்து கொண்டார். தற்போது இவர்களுடைய வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டுள்ளது.

மக்களுக்கு தங்களால் இயன்ற தொண்டுகளை செய்வதற்காக டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்துள்ள டி. இமான், அதன் ஆரம்ப கட்டமாக பார்வையற்ற தம்பதிகள் இருவருக்கு வீடு எடுத்துக் கொடுத்து அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் பார்வையற்ற தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து கேக் கட் பண்ணி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியது. இமானின் இந்த நல்ல செயலுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்.


தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று உங்களுக்கு எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு பதில் அளித்த இமான், தனது வாழ்க்கையில் பட்ட அடித்தான் காரணம் எனக் கூறியதோடு முதல் மனைவியை விவாகரத்து செய்த போது மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீள இரண்டாவது திருமணம் செய்துள்ளதாகவும் அதன் பின்பு பல நல்ல உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement