• Sep 15 2025

சரண்டர் வெற்றிக்குப் பிறகு தர்ஷனின் புதிய அவதாரம்!காட்ஜில்லா படத்தின் பூஜை போட்டோஸ்...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

தர்ஷன் நடித்த ‘சரண்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் புதிய திரைப்படமான ‘காட்ஜில்லா’வில் நடிக்கிறார். இத்திரைப்படம், இயக்குனர் மோகன் குரு செல்வாவின் இயக்கத்தில் உருவாகுகிறது. தயாரிப்பாளர் விக்டர் குமார் வழங்கும் இந்த படத்தின் பூஜை விழா அண்மையில் விமர்சையாக நடைபெற்றது.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த தர்ஷன், பின்னர் ‘கூகுள் குட்டப்பா’, ‘நாடு’ மற்றும் சமீபத்திய ‘சரண்டர்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் தனது நடிப்புத்திறனை நிரூபித்த தர்ஷன், ‘காட்ஜில்லா’ படத்தின் மூலம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வலம் வர உள்ளார்.


இந்த புதிய படத்தில், ஆல்யா மானசா, kpy வினோத், ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது சிறப்பு அம்சமாக இருக்கிறது.


‘காட்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் தர்ஷனின் திரையுலக பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான கட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement