• Sep 09 2024

'மதகஜ ராஜா’ போலவே விடிவுகாலம் பெறும் அரவிந்த்சாமி படம்.. எப்போது ரிலீஸ்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகஜராஜா’ என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.  

அதேபோல் நீண்ட வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் அரவிந்த்சாமி படமும் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த படம் தான் அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’நரகாசுரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

’நரகாசுரன்’ படம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.



கார்த்திக் நரேனே இந்த படத்தை கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் முன்னணி ஓடிடி நிறுவனம் இந்த படத்தை பார்த்து, ஒரு பெரிய தொகைக்கு வாங்கிக்கொள்ள ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ’நரகாசுரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்திப் கிஷான், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு ரான் எதன் யோகான் இசையமைத்துள்ளார்.  

Advertisement

Advertisement