• Jan 19 2025

ஜோ கொடுத்த அப்! அடுத்து அடுத்து படங்கள்! தெலுங்கில் அறிமுகமாகும் ரியோ ராஜ்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தொகுப்பாளராகவும் நமக்கு பரிச்சயமானவர். சமீபத்தில் இவரது ஜோ திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜோ படத்திற்கு பிறகு ரியோவின் சினிமா வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இவருக்கு தற்போது தெலுங்கில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  


​ரியோ எக்கச்சக்கமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். ரெடி ஸ்டெடி போ, ஜோடி நம்பர் ஒன், பிக் பாஸ் கொண்டாட்டம் ஆகியவை ரியோ தொகுத்தால்தான் நன்றாக இருக்கும் எனக் குறிப்பிடும் ஆடியன்ஸ் பலபேர் இருக்கிறார்கள். 


சத்ரியன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் களமிறங்கினார் ரியோ. பிறகு நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். சமீபத்தில் ஜோ படத்தில் டைட்டில் கதாபாத்திரமான ஜோ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ரியோ பெற்றார்.


அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார் ரியோ. இந்த படம் திருமண வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிக்கல்களை மையப்படுத்திய கதையாக அமைந்துள்ளதாம். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார் ரியோ. 


அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறாராம் ரியோ. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதல் ஹீரோவாகவும் ரியோ இரண்டாவது ஹீரோவாகவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement