நடிகர் ஜெயம் ரவி வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் ’சலங்கை ஒலி’ பாணியில் ஒரு வித்தியாசமான நடன கலைஞர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
கடந்த 10 ஆண்டுகளில் ஜெயம் ரவி நடித்த ’தனி ஒருவன்’ ’டிக் டிக் டிக்’ ’அடங்க மறு’ ’கோமாளி’ ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன என்பதும் மற்ற அனைத்து படங்களும் சுமாரான வெற்றி மற்றும் தோல்வி படங்களாக தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’சைரன்’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ’பிரதர்’ ‘ஜெனி’ ஆகிய இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் ஜெயம் ரவி ரொமான்ஸ் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென ஆக்சன் பாதைக்கு மாறியதுதான் அவருக்கு தோல்வி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தால் மட்டுமே இனி தாக்குப்பிடிக்க முடியும் என்று முடிவு செய்த ஜெயம் ரவி தற்போது சலங்கை ஒலி பாணியில் ஒரு நடன கலைஞர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
ஏற்கனவே ஜெயம் ரவி பரதநாட்டிய கலையை முறைப்படி கற்றவர் என்பதால் நடன கலைஞர் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர் தோல்வி காரணமாக வித்தியாசமான கதை அம்சத்தில் ஜெயம் ரவி நடிக்க முன் வந்திருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!