• Apr 15 2026

அடேங்கப்பா.! யூடியூபில் ட்ரெண்டிங் லிஸ்டில் பட்டையைக் கிளப்பும் "வான் வான்" பாடல்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இதயம் முரளி. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மேலும் பகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அந்த வரிசையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலான ‘வான் வான்’ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘வான் வான்’ பாடல் மென்மையான காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாடலின் வரிகள் காதலின் இனிமையையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. 

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக யூடியூபில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement