• Apr 15 2026

இது வாலன்டைன் டே ஸ்பெஷல் இல்லயாம்.. அமீர் – பாவனி ஜோடியின் ரொமான்டிக் போட்டோஷூட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, சக போட்டியாளரும் நடனக் கலைஞருமான அமீருடன் பாவனிக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அமீர், பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததார். 

பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.  


இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்திற்குப் பிறகு, பாவனி புதிதாக கட்டிய வீட்டை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.. தற்போது இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அமீர் மற்றும் பாவனி இருவரும்  எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.  மேலும் அதில்  வாலன்டைன் டே ஸ்பெஷல் இல்லை வாழ்நாள் முழுக்க என கேப்ஷன் போட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Advertisement

Advertisement