• Apr 15 2026

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய காதல்… காதலர் தினத்தில் உலாவரும் ஸ்பெஷல் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை  பிரபலங்களான அர்ச்சனா ரவிச்சந்திரன் – அருண் பிரசாத் ஜோடிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ள நிலையில், அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளராக வாகை சூடினார்.

அதனைத் தொடர்ந்து , பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில்  நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராகப் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் காதலித்து வந்துள்ளனர். இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து புகழ் பெற்றவர்கள்.


பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, அருண் தனது காதலியான அர்ச்சனாவுக்கு பிறந்தநாளன்று நள்ளிரவில் கேமராவை பார்த்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது காதலையும் வெளிப்படையாக அறிவித்தார். 

இந்த நிலையில், காதலர் தினமான இன்று அர்ச்சனா ரவிச்சந்திரன் – அருண் பிரசாத் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement