தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, தங்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

தமிழ் சினிமா வரலாற்றில் வெளிநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய இசை வெளியீட்டு விழாக்களில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. மலேசியா முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் பல நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். விழா நடைபெற்ற அரங்கம் விஜய் ரசிகர்களின் கோஷங்களாலும், இசை ஒலிகளாலும் அதிர்ந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயுடன் சேர்த்து, படக்குழுவைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் மேடையில் பேசினர். அந்த வரிசையில் இயக்குநர் அட்லீ பேசிய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விழா மேடையில் பேசிய இயக்குநர் அட்லீ, நடிகர் விஜயுடன் தன்னுடைய முதல் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். அவர் அதன்போது, “நான் துணை இயக்குநராக இருந்த போது, அவர் ஏற்கனவே 50 படங்கள் பண்ணியிருந்தார். அந்தப் படத்தின் கடைசி நாளில் என்னை தனியாக அழைத்தார்.
‘நீங்க நல்லா வேலை செய்யுறீங்க… உங்களோட எத்திக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. ஏதாவது படம் இருந்தா சொல்லுங்க, பண்ணலாம்னு’ சொன்னார். எனக்கு தெரிஞ்சு எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் அப்படி சொல்ல மாட்டாங்க.” என்று கூறியிருந்தார்.
இந்த வார்த்தைகள் மேடையில் இருந்தவர்களையும், ரசிகர்களையும் பெரிதும் நெகிழ வைத்தன. குறிப்பாக, உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், தன்னுடன் பணியாற்றிய ஒரு துணை இயக்குநரின் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
Listen News!