• Jul 18 2025

சண்டை வரும்... ஆனா பிரிய மனசில்ல.! எத்தனையோ ஏமாற்றம்.. நடிகை விஜியின் உருக்கமான பேட்டி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரை ரசிகர்களின் மனதில் பல ஆண்டுகளாக இடம்பிடித்த நடிகை விஜி சந்திரசேகர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலக அனுபவம் மற்றும் சீரியல் சம்பவங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் நேர்த்தியான பேச்சு, பொதுமக்கள் மனதையும், சமூக வலைத்தளங்களையும் அதிரவைத்துள்ளது.


தனது குடும்ப வாழ்க்கையை பற்றி உருக்கமாக பேசிய விஜி, ரசிகர்களிடமும் பெண்கள் உலகத்திலுள்ள பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அந்தவகையில், "எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரும். அது வழக்கம்தான். ஆனா ‘நாம பிரிஞ்சு போயிடுவோம்னு’ நான் ஒருநாள் கூட நான் யோசிக்கவில்லை." என்றார். 

நடிகர் சூரியைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளித்த விஜி, "சூரி ரொம்ப நல்ல நடிகர். மரியாதை கொண்டவர். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் அன்போட நடந்து கொள்வார். எதிலும் உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்." எனவும் தெரிவித்திருந்தார்.


சினிமா மட்டுமல்ல, சின்னத்திரை துறையிலும் பணம் தராமல் இருப்பதென்பது ஒரு நிலையான பிரச்சனை. அதை நேரடியாக வெளிப்படுத்தும் நடிகைகள் குறைவு. ஆனால், விஜி சந்திரசேகர், "ராதிகா சந்திரகுமாரி சீரியல் ஒன்றில் எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனா இன்னமும் சம்பளம் வரவில்லை. அந்த குழு பணத்தை வழங்காமல் தள்ளிப்போடுறாங்க." என்றார். இந்த நேர்காணல் தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement