• Mar 14 2025

அஜித்துடன் இணையும் நடிகை ரெஜினா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரை உலகின் முன்னணி நடிகையான ரெஜினா தமிழில் மட்டும் இல்லாது கன்னடம்,தெலுங்குவிலும் நடித்து வந்துள்ளார். குறிப்பாக தமிழில்"கேடி பில்லா கில்லாடி ரங்கா"மற்றும் "நெஞ்சம் மறப்பதில்லை" போன்ற படங்களில் நடித்திருந்தாலும்  அவருக்கு தமிழ் படத்துக்கான வாய்ப்பு குறைவாகவே கிடைத்துள்ளது.


இவருக்கு தற்போது விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் பல interviewகளில் கலந்து வருகின்றார். சமீபத்தில்  நேர்கானல் ஒன்றில் கலந்து கொண்டபோது அங்கிருந்த நடுவர் இயக்குநர் மகிழ் திருமேனி விடா முயற்சி படத்தில் நடிப்பதற்கு எவ்வாறு சந்தர்ப்பம் அளித்தார் என கேட்டிருந்தார்.

அதற்கு  ரெஜினா" அவரும் நானும் கழகத் தலைவன் படத்திலிருந்தே சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து எனினும் அந்தப் படத்தினை எடுக்க முடியவில்லை தற்போது விடாமுயற்சியில்  இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கூறினார்.


மேலும் முன்பு இருந்தே இயக்குநருக்கு தன்னை நடிகையாக வைத்து நடிப்பதற்கு விருப்பம் இருந்ததாகவும் கூறினார் ரெஜினா.அத்துடன் தனது நடிப்பு மேல அவருக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.அதே வேளை அஜித்தும் ஒரு பேட்டியில் தன்னை விட ரெஜினாவைப் பற்றியே மக்கள் பேசுவார்கள் என குறிப்பிட்டு  இருந்தார்.






Advertisement

Advertisement