தூய்மை நல பணியாளர்கள் தங்களின் உரிமைக்காக கடந்த 10 நாட்களாக மழை, வெயில், பசியை பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
திமுக தலைமையிலான அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மறுக்கிறது எனக் குற்றம்சாட்டிய நடிகை கஸ்தூரி, “தூய்மை பணியாளர்கள் சாலையோரத்தில் போராடி இருக்க, முதலமைச்சர் ஒரு மூத்த நடிகையை சந்திக்க நேரம் ஒதுக்கியார்.ஆனால், இப்போர் குறித்து ஒரு வார்த்தை பேச நேரமில்லை!” எனக் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண்கள் 281 முதல் 284 வரை, தூய்மை பணியாளர்களுக்கான நிரந்தர வேலை, கல்வி வாய்ப்பு, சேவை நலன்கள் உள்ளிட்ட பல உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக, வாக்குறுதி 281-ல் “தற்காலிக பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்” என நேரடியாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவர் "எந்த வாக்குறுதியும் இல்லை" என கூறியதைக் குறிப்பிட்டு, இது தேர்தல் வாக்குறுதியை மறுக்கும் செயலாகவும், மக்களிடம் கொடுத்த நம்பிக்கையை விலைக்கு விற்றதுபோலவும் உள்ளது என விமர்சனம் எழுகிறது.
மேலும், ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எழுதிய கடிதத்தையும், இப்போது அவர் தலைமை வகிக்கும் அரசின் நிலைப்பாடும் கேள்விக்குள்ளாகி வருகிறது.
Listen News!