• Aug 11 2025

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியின் மகளுக்கு பெயர் சூட்டு விழா...! என்ன பெயர் தெரியுமா?

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா தம்பதியின்  மகளுக்கு Adlin Victoria (ஆட்லின் விக்டோரியா) என பெயர் சூட்டும் விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி, தனது தனித்துவமான பேச்சு முறை மற்றும் உடல் மொழியால் தனக்கென ஒரு ரசிகை வட்டத்தை உருவாக்கியவர்.


நடனக் கலைஞராக 1990களில் தனது பயணத்தை தொடங்கிய கிங்ஸ்லி, நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் முக்கிய திருப்புமுனையை சந்தித்தார். பின்னர் டாக்டர், ஜெயிலர், பீஸ்ட், வலிமை போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


2023ஆம் ஆண்டு, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த கிங்ஸ்லியும், இந்து மதத்தை சேர்ந்த சங்கீதாவும் இருமுறை திருமண முறையில் காதல் திருமணமாக இணைந்தனர். சங்கீதா ஏற்கனவே ஒரு திருமணத்தை சந்தித்தவர் என்பதும், தனது தந்தையின் மறைவுக்குப் பின் கிங்ஸ்லியை நேசித்து திருமணம் செய்துகொண்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சங்கீதா கர்ப்பமாக இருப்பது அறிவிக்கப்பட்டதையடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தராகம் சீரியலிலிருந்து அவர் தற்காலிகமாக விலகினார். பிறகு, சென்னையில் பிரம்மாண்டமான வளைகாப்பு நடைபெற்றது. தற்போது, தம்பதியினரின் மகளுக்கு நான்கு மாதங்கள் ஆன நிலையில், பெயர் சூட்டும் விழா உற்சாகமாக நடந்தது.


விழாவில், குழந்தை அழகாக அலங்கரிக்கப்பட்ட வட்ட நிற தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டார். கிங்ஸ்லி, சங்கீதா மற்றும் குழந்தை மூவரும் சாக்லேட் கலந்த பீச் நிற உடையில் கம்பீரமாக தோன்றினர். கிறிஸ்தவ முறைப்படி பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.


விக்டோரியா மகாராணியின் பெயரையும் குழந்தையின் பெயரில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ரசிகர்கள், "Adlin Victoria" எனும் பெயர் மிகவும் அழகாக இருப்பதாகவும், சிறுமிக்கு சுத்தி போட வேண்டும் எனவும் கூறி, தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement