• Jan 19 2025

மகளின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய நடிகை அசின்- அம்மாவுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல்யமானவர் தான் நடிகை அசின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.


 அதன்பின்னர் விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, உள்ளம் கேட்குமே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார்.


 மேலும் வரலாறு, போக்கிரி, வேல், காவலன், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டதால் நடிப்பிலிருந்து விலகிய இவர் குடும்பத்தை கவனித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் தன்னுடைய மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களைத் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement