• Jan 19 2025

’வானத்தை போல’ சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் ‘வாணி ராணி’ ஜோடி.. சூப்பர் அறிவிப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’வானத்தைப்போல’ சீரியலில் ’வாணி ராணி’ சீரியலில் நடித்த ஜோடி திடீரென என்ட்ரி ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ’வானத்தைப்போல’ சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் 1000 எபிசோடுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் திடீரென ராதிகா இரட்டை வேடங்களில் நடித்த ’வாணி ராணி’ சீரியலில் நடித்த ஜோடி என்ட்ரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் ’வாணி ராணி’ சீரியலில் சூர்யா மற்றும் டிம்பிள் கேரக்டர்களில் நடித்த அருண்குமார் மற்றும் நீலிமா ராணி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ’வானத்தைப்போல’ சீரியலில் கௌதம் மற்றும் திவ்யா ஆகிய கேரக்டர்களில் என்ட்ரி ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவலை நீலிமா மற்றும் அருண்குமார் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ’வாணி ராணி’ ஹிட் ஜோடியை பார்க்க போகிறோம் என்று கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளாக சீரியல்களில் நடிக்காத நிலையில் ’வானத்தைப்போல’ சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆவது அதுவும் தனது ஹிட்டான ஜோடியுடன் ரீஎன்ட்ரி ஆவது அனைவருக்கும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement