• Apr 27 2024

சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி- மாஸ்டருக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் விருமன்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளவர் தான் அதிதி சங்கர்.

முதல் படத்திலேயே அதிதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.இப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு நடனம் என்பன ரசிகர்களைக் கவர்ந்து விட்டது. இதனால் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகின்றார்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார்.


இவ்வாறு விருமன் படத்தின் பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருடன் இணைந்து ஆடிய வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement