• Apr 25 2024

மீண்டும் ஒரு குட் நியூஸ்- திருமண பந்தத்தில் இணைந்த சத்யா சீரியல் பிரபலம்- குவிந்து வரும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு முழுவதும் பல சின்னத்திரை பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர் என்பது யாவரும் தெரிந்ததே. இந்த நிலையில் சில நாட்களுக்கு முதல் குக்வித் கோமாளி புகழ் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்களும் வைரலாகியது.

அதே போல யூடியூப் பிரபலமும் காமெடி நடிகருமான விக்னேஷ்காந்தும் சில நட்களுக்கு முதல் திருமணத்தில் இணைந்தார். இவருடைய திருமணத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். இவரது திருமணம் குறித்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.


மேலும் ராஜா ராணி சீரியல் நடிகர் செந்திலும் திடீரென திருமணத்தில் இணைந்து கொண்டார். இதை அறிந்த இவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.


இவர்களை அடுத்து தற்பொழுது அனைத்து சேனல்களிலும் பேசு பொருளாக இருப்பது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரிய் நடிகை மகாலட்சுமியின் திருமணம் தான். இவர்களின் திருமணத்தை அடுத்து இருவரும் பல இன்டவியூக்களில் ஈடுபட்டு தமது காதல் குறித்து பேசி வருகின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது சத்யா சீரியலில் குட்டிப்புலி என்னும் கதாப்பாத்திரத்தில் காமெடி நடிகராக நடித்த இந்திரனும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இவர் இது தவிர இன்னும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். இவருக்கு திருமண வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement