தமிழ் சினிமாவில் 'கேப்டன்' என அழைக்கப்பட்ட பிரபலமான நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும், ஆரம்ப காலத்தில் அங்கேயும் தனக்கான தனி முத்திரை பதித்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலில் தலை காட்டாமல் ஓய்வெடுத்து வந்தார்.
இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக விஜயகாந்தின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
எனினும், அவருக்கு பல்வேறு மருத்துவ கண்காணிப்புகள் இருந்த நிலையிலும், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இன்று காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் விஜயகாந்த் மறைவையொட்டி இன்று காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசியலைப் போல் சினிமாவிலும் பல வியத்தகு சாதனைகளை படைத்துள்ள விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவை திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!