தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். இது குறித்து வெளியான தகவலின்படி குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு மும்பையை வதிவிடமாக தேர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மனைவியான ஜோதிகா தனது பெற்றோர்களுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதே இதற்கான முக்கிய காரணம் என சூர்யா விளக்கமாக தெரிவித்துள்ளார்.
சினிமா பணிகள் காரணமாக சூர்யா தொடர்ந்து சென்னைக்கு விமானத்தில் சென்று வேலை முடிந்ததும் மீண்டும் மும்பைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் மகளான தியா தனது உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். வரும் ஜூலை மாதம் தியா அமெரிக்கா புறப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தியாவிற்கு அமெரிக்காவில் படிக்க அட்மிஷன் கிடைத்தது சூர்யாவுக்கு பெருமை அளித்ததோடு பிரிவு நினைவில் அவர் தேம்பி தேம்பி அழுதாராம். தந்தையின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.
Listen News!