• Dec 05 2024

புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு.. நடிகர் சிவகார்த்திகேயனின் மாபெரும் உதவி

Mathumitha / 9 hours ago

Advertisement

Listen News!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், புட்செல் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்த உதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, சிவகார்த்திகேயன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டினார். அவர் கூறியதாவது, "இந்நேரத்தில் நம்மிடம் இயன்ற அனைத்தையும் நிவாரணத்திற்காக செய்ய வேண்டும். இது கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்" என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்களிடமும் சமூகத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அவரது உதவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement