• Sep 19 2024

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு காதல் மனைவியை கழட்டி விட்ட நடிகர் ரிச்சர்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை ஷாலினியின் தம்பி என்ற அடையாளத்தோடும் வளர்ந்து வரும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ரிச்சர்ட். இவர் நடிகர் அஜித்தின் மச்சான் என்பதும் யாவரும் அறிந்ததே.

2002ம் ஆண்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதல் வைரஸ் படத்தில் இருந்து நாயகனாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுகு்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான இன்னும் சில படங்களும் சரியான அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை.

இருப்பினும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரௌபதி திரைப்படம் இவரை சிறந்த நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தோடு இந்தப் படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனால் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

மேலும் இவர் பிரபல பாடகரின் மகளை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது.

ஆனால் இடையில் ரிச்சர்ட் மற்றும் அந்த பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை வந்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். பிறகு ரிச்சர்ட் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/7NphYEr517E

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement