• Jan 30 2026

இயக்குநர் மகிழ் திருமேனிக்கு உதவிய நடிகர் அஜித் குமார்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி தமிழ் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் கலக்கிய நடிகர்  மோகன்லாலின் L2 EMPURAAN திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த மேடையில் அஜித் குமார் பற்றி கட்டாயம் கூற வேண்டும் என்றதுடன் ,அங்கு அஜித்தை பத்ம பூஷன் என்றும் குறிப்பிட்டார் இயக்குநர்.மேலும்  விடா முயற்சி படத்தை தொடர்ந்து அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேரில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோசம் என்றார்.


"Thank you சார் for ஆல் த சப்போர்ட்" என்று கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெருமையுடன் ஒரு இயக்குநர் கூறுவது ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக தனக்கு எவ்வளவோ தருணத்தில் அஜித் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன் உங்கள் படத்தை பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அவர்களைப் போல நானும் பிப்ரவரி 6 படம் ரிலீஸ் ஆவதை எதிர்பார்த்துள்ளேன் என்றார் மகிழ் திருமேனி.

அத்துடன் படம் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்க காத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.இந்த வீடியோ வெளியானதிலிருந்து  தல ரசிகர்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம்.

Advertisement

Advertisement