• Jan 19 2025

இணையத்தில் கசிந்த வேட்டையனின் அதிரடி காட்சிகள்! தலையில் துண்டுபோட்ட படக்குழுவினர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் திகதியான இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கிய த. செ.ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இது இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் முக்கியமான காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளார்கள் ரசிகர்கள். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. 


பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் வெளி விட்டு வருகின்றார்கள். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் மொத்த காட்சிகளும் பிட்டு பிட்டாக இணையத்தில் பரவியது. அதேபோல விஜயின் கோட் திரைப்படமும் அதே நிலைமையில் தான் காணப்பட்டது.

இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என படக்குழுவினர் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைத்தும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றார்கள். ஆனால் ரசிகர்கள் இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement