• Jan 18 2025

அவசரமாக காசு கேட்ட ரசிகர்... அனுப்பி வைத்த ஜிவி பிரகாஷ்... வைரலாகும் டுவிட்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜி.வி. பிரகாஷின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து, "தனக்கு மிகவும் அவசரமாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது.


நீங்கள் கொடுத்து உதவி செய்தால், நாளை திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டை பார்த்த அடுத்த நான்கு நிமிடங்களில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பியுள்ளார். 


இதனை அடுத்து, நன்றி கூறிய அந்த ரசிகர் மறுநாளே அந்த பணத்தை திருப்பி அனுப்பி, "அவசர நேரத்தில் உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றும் கூறியுள்ளார். குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement