• Mar 29 2025

கிருத்திகா இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணி உருவாகிறதா? - அதிரடி தகவல்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனிப்பட்ட நடிப்புத் திறனாலும் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் மாறுபட்ட தோற்றத்தாலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருக்கின்றார்.

விஜய் சேதுபதி ஏற்கனவே "ஏஸ்" மற்றும் "ட்ரெய்ன்" போன்ற படங்களை கைவசம் வைத்திருப்பதோடு அடுத்ததாக இயக்குநர் கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது. ஆனால், இவரது அடுத்த திட்டம் இயக்குநர் கிருத்திகாவின் புதிய படம் என்பதும் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.


இயக்குநர் கிருத்திகா இயக்கவுள்ள புதிய படம் மிகவும் விறுவிறுப்பான திரில்லர் மற்றும் குடும்பக் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.விஜய் சேதுபதி எல்லா வகை கதாபாத்திரங்களிலும் வெளிப்படையான நடிப்பை வழங்கும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அத்துடன் இது தமிழ் திரையுலகில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம், கிருத்திகா இயக்கத்தின் தனித்துவம் ஆகியவை இணைந்து அந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement