தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், சமீபத்தில் ஒரு ரசிகர் செய்த செயல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், அவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு தீவிர ரசிகர், யாஷிகா ஆனந்திற்காக தனது உடலில் யாஷிகாவின் படத்தை பொறிக்கச் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த செயல் யாஷிகாவிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ரசிகர்கள் அவருடைய படத்தை பொறித்தது மகிழ்ச்சியைக் காட்டிலும் வருத்தமாக உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை யாஷிகா, "இப்படி டாட்டூ போட்டுக் கொண்டால் என்ன பயன்? என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், தயவுசெய்து இப்படி பண்ணாதீங்க. உங்கள் பெற்றோரை சந்தோசப்படுத்தினாலே எனக்குப் போதும் "என்று கூறியுள்ளார்.
Listen News!