பிரபல நடிகர் ரவி மோகன், அண்மையில் கெனிஷாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இவர்களின் தரிசன பயணத்தை சிறப்பாக பதிவு செய்தன.
இவர்களின் சந்திப்பு குறித்து ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்ததோடு, அந்த பதிவே தற்போது ரசிகர்களிடையே சூடான விவாதமாக மாறியுள்ளது.
அந்தவகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், " நீங்கள் மற்றவர்களை முட்டாள் ஆக்கலாம். நீங்கள் உங்களையும் முட்டாள் ஆக்கலாம். ஆனால் நீங்கள் கடவுளை முட்டாள் ஆக்க முடியாது." என்ற பதிவினை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.
Listen News!