• Jul 01 2025

சிவகார்த்திகேயனை ஒதுக்கிய 'சித்தாரே ஜமீன் பர்'..! மனவலியுடன் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

இந்த வருடம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் தான் "சித்தாரே ஜமீன் பர்". குழந்தைகளின் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்று தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டது. இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்க, அமீர் கான் இப்படத்தில் தயாரிப்பாளராகவும் ஈடுபட்டிருந்தார்.


அப்போது கதையை தமிழில் சிவகார்த்திகேயனுக்கும், ஹிந்தியில் ஃபர்ஹான் அக்தருக்கும் சொல்லப்பட்டது. இருவரும் கதையால் ஈர்க்கப்பட்டு, கால்சீட்டிற்கும் ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டம் பரபரப்பாக நகரும் வேளையில், திடீரென அமீர் கான் தனது மனநிலையை மாற்றினார்.

இது குறித்து அமீர்கான், “லால் சிங் சத்தா படம் வெளியானபின், சினிமாவிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கலாம் என முடிவு செய்தேன். எனவே, சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிகராக அல்ல, தயாரிப்பாளராக மட்டும் இருப்பதாக இயக்குநர் பிரசன்னாவிடம் தெரிவித்தேன்.” என்றார்.


பின்னர் இப்படத்தின் கதை அவரது உள்ளத்தில் ஆழமாக பதிந்ததால், “இந்தக் கதையில் நாமே ஏன் நடிக்கக்கூடாது?” என்ற எண்ணம் அவருக்கு வந்ததாம். இந்த மனநிலை மாற்றத்தை இயக்குநரிடம் பகிர்ந்த அமீர் கான், அவரிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, தனது முடிவை சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தரிடம் தெரிவித்து, நேரடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement