• Dec 18 2024

ஸ்கிரிப்ட் ரெடி இனி ஷூட்டிங் தான்! இயக்குநர் அட்லீ கொடுத்த "A6" அப்டேட்!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் அட்லீ தற்போது பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த திரைப்படம் தொடர்பான அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

 

ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குநர் அட்லீ A6-திரைப்படத்தின் வேளைகளில் இறங்கியுள்ளார். சமீபத்திய அடுத்த படமான A6 பற்றி இவர் பேட்டியில் பேசுகையில், “A6 திரைப்படத்துக்கு நீண்ட காலமும் உழைப்பும் வேண்டும். நாங்கள் ஸ்கிரிப்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்,  இனி தயாரிப்பு கட்டத்தில் இருக்கிறோம். விரைவில், கடவுளின் ஆசீர்வாதத்துடன் படம் தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அட்லீ எனது தயாரிப்பில் நடிகை விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் இயக்குநர் பாலாஜி தரன் இயக்குவார். என்றும் கூறினார். தற்போது அட்லீ கூறிய இந்த விடையம் குறித்து ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் அட்லீ தயாரிப்பில் உருவாகிய பேபி ஜான் திரைப்படம் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகாகபி ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 25 ஆம் திகதி ரிலீசாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement