தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதர். இவர் தற்போது ஏனைய இயக்குனர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது அஸ்வின் மாரிமுத்து இயற்றியுள்ள டிராகன் படம் எதிர் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
டிராகன் படத்தில் ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் அனுபமா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிக்க அதற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் டிராகன் படம் வெளியாகும் அன்றைய நாளில் தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதனிடம் நீங்க தனுஷ் மாதிரியே நடிக்கிறீங்க அவருடன் உங்களுக்கு போட்டியா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் விடாமுயற்சிப்படத்தின் ரிலீஸால் தான் டிராகன் படத்தை பெப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததாகவும் இதே காரணத்தினால் தான் தனுஷின் படமும் தள்ளி போனதாகவும் தெரிவித்துள்ளார்,
மேலும் ஒரே நேரத்தில் இந்த இரண்டு படமும் ரிலீஸ் ஆவதை நான் போட்டியாக நினைக்கவில்லை. இரண்டுமே காதலை மையமாகக் கொண்டுதான் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Listen News!