• Jul 10 2025

ஆகாஷ் வழக்கில் திடீர் திருப்பம்..! உயர்நீதிமன்றத்தின் கேள்வியால் திணறிய அமலாக்கத்துறை!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபமாக தமிழகத்தில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) மேற்கொண்டு வரும் சோதனைகள், திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பையும், நீதிமன்றங்களில் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதனை எதிர்த்து, அவர்கள் தொடர்ந்த வழக்கு தற்போது முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது.


டாஸ்மாக் வழக்கை மையமாகக் கொண்டு, ED அதிகாரிகள் கடந்த வாரங்களில், பல்வேறு தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். அதற்காக, அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களும் சோதனையிடப்பட்டதோடு, சீல் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.


இந்த சூழ்நிலையில், "சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை" என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன், டாஸ்மாக் வழக்கின் சோதனையில் தங்களது வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அமலாக்கத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் (Special Public Prosecutor), திணறி விட்டார். அவரிடம் பதில் இருக்காத நிலை உருவானது. இந்த வழக்கில் வெளிவந்த தகவல்கள், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement