• Oct 16 2026

ஹாலிவுட்டையே மிஞ்சும் பிரம்மாண்டம்.! ராமாயணா டிரெய்லரில் மிரள வைத்த சம்பவம்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5ஆம் திகதியும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ராமர் மற்றும் ராவணன் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தீமையை அழித்து ராவணனை வீழ்த்த ராமர் சபதம் எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், மூன்று உலகங்களையும் ஆளும் வலிமை கொண்டவனாக ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளார். சீதையைக் கடத்தும் போது ஜடாயு அவரை எதிர்த்துப் போராடும் காட்சிகளும், ராமர் - சீதை இடையிலான உணர்வுபூர்வமான தருணங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

2 நிமிடங்கள் 36 விநாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில் பிரம்மாண்ட போர்க் காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement