• Apr 20 2025

விக்ரம் படம் வெளியாக முதல் படைத்துள்ள அபூர்வ சாதனை..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, துசாரா விச்சயன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "வீர தீர சூரன்" திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இது ஒரு பழங்கால வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் படம் ஆகும். 


இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார், மேலும் ரியா சுபு தயாரித்துள்ளார். படம் ரிலீசுக்குப் போகும் முன்னர் படத்துக்கான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் background musicல் பின்னி பெடல் எடுத்துள்ளதாகவும், படத்தின் கிளைமேக்சில் இயக்குநர் விக்ரமின் தூள் படத்தில் பறவை முனியம்மா பாடிய "சிங்கம் போல நடந்து வாரான் " பாடலை வைத்து வித்தியாசமான டுவிஸ்ட் வைத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த நிலையில் இப் படத்தின் அதிக எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் தேதிக்கு நெருங்கி வரும் நிலையில், அதன் சுவாரஸ்யமான காட்சிகளும் கதையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் நேற்றைய தினம் இப் படத்தின் trailor மாஸாக வெளியாகியிருந்தது. இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement