தெலுங்கு ,மலையாளம் ,கன்னடா ,தமிழ் என பல மொழிகளில் நடித்து அசத்திய நடிகை சங்கீதா பிரபல பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து சிறப்பித்து வருகின்றார். பிதா மகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் சூப்பர் ஸ்டைலிஷாக கலந்து வரும் இவர் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் மனமுடைந்து பேசியுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இப்போது சந்தோஷமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் "என்ன என்னைக்கு சினிமாவுல நடிக்கவிட்டாங்களோ அன்னைக்கே என் குடும்பத்துல இருக்க யாருக்கும் மனசாட்சி இல்லன்னு புரிஞ்சுகிட்டேன். என்னோட ஸ்கூல நிறுத்திட்டு 13, 14 வயசுல நடிக்க சினிமாவுக்கு அனுப்புனாங்க. நான் தான் என் குடும்பத்த பாத்துக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு. என்னோட சகோதரர்கள் எல்லாம் குடிக்கு அடிமாயாகிட்டாங்க. நான் எமோஷனல் பிரஷரால தான் இந்த வேலைக்கே போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்" என மனவருத்தத்துடன் பேசியுள்ளார்.
Listen News!