• May 10 2026

'கருப்பு' படத்தில் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் - ஆர்ஜே பாலாஜி ஓபன்டாக்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி மற்றும் முன்னணி நடிகர் சூர்யா இணையும் 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மே 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், இது ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.


விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று படக்குழுவும் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, “இந்த ‘கருப்பு’ படம் படையப்பா, கில்லி போன்ற முழுமையான எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இருக்கும். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கக்கூடிய படம் இது,” என்றார்.

மேலும், தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், “நான் கல்லூரியில் படித்த காலத்தில் சூர்யாவின் வெற்றி படங்களுக்கு டிக்கெட் கிடைப்பதே கடினமாக இருந்தது. அப்போது அவரின் ரசிகனாக இருந்த நான், இன்று அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம்,” என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. மொத்தத்தில், ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement