• Jun 24 2026

'ஸ்டாலின் அங்கிள்’ மீண்டும் சூடு பிடித்த சர்ச்சை.. விஜயை கடுமையாக சாடிய சத்யராஜ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பெரும் ரசிகர் ஆதரவும் மக்கள் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், விஜய் அரசியலுக்கு வந்தபோது பெரியாரையும் அம்பேத்கர் ஆகியோரை தனது கொள்கை முன்னோடிகளாக குறிப்பிட்டதை வரவேற்றதாக சத்யராஜ் தெரிவித்தார்.

ஆனால், ஒருமுறை மேடையில் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் எம். கே ஸ்டாலின் குறித்து ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று குறிப்பிட்டது தமக்கு அதிர்ச்சியாக இருந்ததாக கூறினார். அரசியலில் மரியாதை முக்கியம் என்றும், இப்படியான குறிப்புகள் தேவையற்றவை என்றும் அவர் விமர்சித்தார்.


மேலும், விஜய் தனது ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் பிரச்சினை நேரத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா முன் சென்று, “அம்மா… எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தார். அப்போது “அம்மா” என்பதற்குப் பதிலாக “ஆண்ட்டி” என்று கூறியிருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும்?

அந்த காலகட்டத்தில் அது பெரிய சர்ச்சையாக மாறி, கடும் எதிர்ப்பை சந்தித்திருப்பார். அதிமுகவினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் சமூக வலைதளங்களில் இல்லை; அதனால் என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. நான் பெரியாரை தலைவனாக ஏற்றுக் கொண்டவன் என்று பேசியுள்ளார். 

Advertisement

Advertisement